Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் கமல் – லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு

கமல் – லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு

1 minutes read

மாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.கமல் - லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு

மாநகரம் படத்தில் அறிமுகமாகி பின்னர் கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துவிட்டார் லோகேஷ் கனகராஜ்.

கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர் என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்படத்தையடுத்து கமலின் 232 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். இப்படத்திற்கு எவனென்று நினைத்தாய் என்று தலைப்பு வைத்திருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று டைட்டில் லுக் டீஸர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

தலைப்பு

அதில் இப்படத்திற்கு விக்ரம் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். நடிகர் கமல் ஏற்கனவே விக்ரம் என்ற தலைப்பில் படம் நடித்திருக்கிறார். தற்போது நடித்து வரும் படத்திற்கு விக்ரம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த டைட்டில் லுக் டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More