Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கவினுக்கு விரைவில் திருமணம் | பெண் யார் தெரியுமா?

கவினுக்கு விரைவில் திருமணம் | பெண் யார் தெரியுமா?

1 minutes read

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான நடிகர் கவினுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.கவினுக்கு விரைவில் திருமணம்... பெண் யார் தெரியுமா?பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பெருமளவில் பிரபலமாகி தனக்கென தனி ரசிகர்பட்டாளத்தை கொண்டவர் நடிகர் கவின். ஆர்.ஜேவாக அறிமுகமான இவர் தொலைக்காட்சியில் கனா காணும், சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து கவினுக்கு பட வாய்ப்புகள் கிடைத்தநிலையில் இவர் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். பின்னரே அவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. மேலும் பிக்பாஸ் வீட்டில் அபிராமி, சாக்ஷி ஆகியோருடன் ரொமான்ஸ் மற்றும் லாஸ்லியாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார்.

கவின்

இந்த நிலையில் தற்போது நடிகர் கவினுக்கு திருமணம் என தகவல்கள் தீயாய் பரவி வருகிறது. ஸ்டைலிஸ்ட் ஒருவரை கவின் காதலித்து வருவதாகவும், அவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More