செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா 2 மாதத்துக்கு முன் பதிவு திருமணம் செய்த சித்ரா – விசாரணையில் அம்பலம்

2 மாதத்துக்கு முன் பதிவு திருமணம் செய்த சித்ரா – விசாரணையில் அம்பலம்

1 minutes read

தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சின்னத்திரை நடிகை சித்ரா, 2 மாதத்துக்கு முன் பதிவு திருமணம் செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்திருப்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் நடிகை சித்ரா கடந்த 2 மாதத்துக்கு முன்பு ஹேம்நாத்துடன் பதிவு திருமணம் செய்திருப்பது தெரிய வந்தது. அவர்கள் அக்டோபர் 19-ந் தேதி பதிவு திருமணம் செய்து உள்ளனர். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது – சித்ராவின் தாய் கண்ணீர் பேட்டி

சித்ரா தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததும் அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உடலை பார்த்து கண்ணீர் வடித்தனர்.
இந்நிலையில், சித்ராவின் இறப்பு குறித்து பேசியுள்ள அவரது தாய், தனது மகள் வலிமையான மனநிலை கொண்டவர் என்றும் அவளது மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.