Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் சர்வதேச திரைவிழாவில் அசுரன் | தனுஷ் நெகிழ்ச்சி

சர்வதேச திரைவிழாவில் அசுரன் | தனுஷ் நெகிழ்ச்சி

1 minutes read

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட மக்களின் திரைப்படமான அசுரனை தேர்வு செய்ததற்கு நன்றி என தனுஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சர்வதேச பட விழாவிற்கு மக்களின் படமான அசுரனை தேர்வு செய்ததற்கு நன்றி - தனுஷ் டுவிட்இந்திய சர்வதேச திரைப்பட விழா கடந்த 1952ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வரும் இந்த விழா, இந்த ஆண்டு கோவாவில் வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவல் காரணமாக விழா ஒத்திவைக்கப்பட்டது.

இதன்படி வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்பட விழாவில் தேர்வான படங்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படமும் தேர்வாகியுள்ளது. 

தனுஷின் டுவிட்டர் பதிவு

இதற்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள தனுஷ், “கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பனோராமா பிரிவில் அசுரன் திரைப்படம் திரையிடப்பட தேர்வாகிருப்பது படக்குழுவிற்கு கிடைத்த பெருமை. மக்களின் திரைப்படமான அசுரனை தேர்வு செய்ததற்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More