Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் என்னுள் நீ | வவுனியா நவநீதனின் புதிய குறும்படம்!

என்னுள் நீ | வவுனியா நவநீதனின் புதிய குறும்படம்!

1 minutes read
Image may contain: 1 person

வவுனியாவில் குறும்படங்கள் இயக்குகின்றவர்களின் வரிசையில் நவநீதன் குறிப்பிடத்தக்க ஒருவர். இவர் சிறந்த நடிகர், இயக்குனர் என்று பல திறமைகளை தன்னகத்தே கொண்ட இவர் குறிப்பிட்ட சில படங்களை இயக்கி தயாரித்துள்ளார்.

Image may contain: text that says 'என்னுள் நி'

அதன் வரிசையில் முதல் படமான ” வெற்றிப்பாதை” “நினைப்பது நடப்பதில்லை” “மாற்றம்” “பழி” இன்னமும் பல ஆவணத் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

தற்போது நவநீதனின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் புதியகுறும்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இதன்வெளியீட்டுக்காக தயாரிப்பு நிறுவனமான ” அம்மா கலைக்கூடம் மற்றும்” லைவ் டிஸ்டிவூட்டர்” போன்றவை இணைந்துள்ளது. இப்படத்தில் நவநீதன், தனுஷியா மற்றும் சசி ஆகியோர் நடித்துள்ளனர்.

இணை இயக்குனராக கிரிதரனனும் ஒளிப்பதிவாளராக டினோயனும் படத்தொகுப்பாளராக ரஜிந்தனும் கலை இயக்குனராக விக்கியும் பணியாற்றுகின்றனர். ” என்னுள் நீ” என பெயரிடப்பட்ட இந்தப் படம் விரைவில் இணையத்தில் வெளியாகவுள்ளது.

இதன் வெளியீடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை 25-12-2020 மாலை 6 மணியளவில் வெளியீட்டுக்காக தயார் நிலையில் உள்ளது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More