Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட்’ | ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட்’ | ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

1 minutes read

வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால், வைபவ் நடித்துள்ள ‘லைவ் டெலிகாஸ்ட்’ வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட்’ - ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

முன்னணி நடிகர், நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க தொடங்கி உள்ளனர். சூர்யாவும் வெப் தொடரில் நடிக்கிறார். தற்போது காஜல் அகர்வாலும் வெப் தொடரில் நடித்துள்ளார்.

இந்த தொடரை வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். தொடருக்கு ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்று பெயர் வைத்துள்ளனர். பேய் கதையம்சம் உள்ள தொடராக தயாராகிறது. இதில் காஜல் அகர்வால் பேயாக வருகிறார். இதில் வைபவ், கயல் ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடரின் போஸ்டர்

இதுகுறித்து காஜல் அகர்வால் கூறும்போது, “சமீப காலமாக வெப் தொடர்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. நடிகர், நடிகைகள் பலரும் வெப் தொடர்களில் நடிக்க ஆரம்பித்துள்ளனர்.

நானும் வெப் தொடரில் நடிக்கிறேன். 10 தொடர்களாக இது வெளிவரும். தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்துவிட்டேன். சவாலான விஷயங்களில் ஈடுபட எப்போதுமே தயாராக இருக்கிறேன்” என்றார். இந்த வெப் தொடரின் முதல் எபிசோட் அடுத்த மாதம் 12-ந் தேதி ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று அறிவித்து காஜல் அகர்வால் தோற்றத்தையும் வெளியிட்டு உள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More