செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மீண்டும் பிரபல நடிகருடன் இணையும் பிரியங்கா மோகன்!

மீண்டும் பிரபல நடிகருடன் இணையும் பிரியங்கா மோகன்!

0 minutes read

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் டாக்டர். நெல்சன் இயக்கியிருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படம் இன்னும் வெளியாகாத நிலையில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தில் பிரியங்கா மோகன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் டான் படத்தை இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.