Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா தேனிலவுக்குச் செல்லும் புதுமணத் தம்பதியின் ஈகோ | ‘பூம் பூம் காளை’ திரைவிமர்சனம்

தேனிலவுக்குச் செல்லும் புதுமணத் தம்பதியின் ஈகோ | ‘பூம் பூம் காளை’ திரைவிமர்சனம்

2 minutes read
பூம் பூம் காளை
நடிகர்கெவின்
நடிகைசாரா
இயக்குனர்ஆர்.டி.குஷால் குமார்
இசைஸ்ரீநாத்
ஓளிப்பதிவுகே.பி.வேல்முருகன்

நாயகன் கெவின் – நாயகி சாரா இருவருக்கும் திருமணம் ஆகிறது. இருவரும் தேனிலவிற்காக ஊட்டி செல்கிறார்கள். அங்கு முதலிரவிற்காக தயாராகிறார் கெவின். ஆனால், சாராவோ நமக்குள் நல்ல புரிதல் வந்த பிறகு முதலிரவு வைத்துக் கொள்ளலாம் என்று தடை போடுகிறார்.
தன் ஆசைகளை கட்டுப்படுத்த முடியாத கெவின், சாராவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், சாரா, கெவினின் ஆசைக்கு அடங்க மறுக்கிறார். இதனால் இவர்களுக்குள் விரிசல் ஏற்படுகிறது. இறுதியில் இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

பூம் பூம் காளை விமர்சனம்

நாயகன் கெவின், அடங்காத காளை போல், இவரின் நடிப்பை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. நாயகி சாரா, கொடுத்த வேலையை செய்திருக்கிறார். இருவரும் புதுமுகங்கள் என்பது திரையில் தெளிவாக தெரிகிறது. இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது.
போலீஸ் அதிகாரியாக வரும் அபிநயஸ்ரீ நடிப்பில் பளிச்சிடுகிறார். அப்புக்குட்டியின் காமெடி திரைக்கதை ஓட்டத்திற்கு ஆங்காங்கே கை கொடுத்திருக்கிறது. 

பூம் பூம் காளை விமர்சனம்

கணவன், மனைவிக்குள் நடக்கும் ஈகோவை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஆர்.டி.குஷால் குமார். இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே திரையில் அதிக நேரம் காண்பித்து, அவர்களை சுற்றியே அதிக நேரம் திரைக்கதை நகர்வது அதிக சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கிறது. ஆர்.சுந்தராஜன், சச்சு ஜோடியை வைத்து இளைய தலைமுறைக்கு அறிவுரை சொல்லி இருக்கிறார். இதை ஓரளவிற்கு ஏற்க முடிகிறது.

பூம் பூம் காளை விமர்சனம்

கே.பி.வேல்முருகனின் ஒளிப்பதிவு, ஊட்டியை அழகாக காண்பிக்கிறது. ஸ்ரீநாத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ரிஷா ஆடும் குத்தாடம் தாளம் போட வைக்கிறது.
மொத்தத்தில் ‘பூம் பூம் காளை’ அடங்கிய காளை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More