Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா இளம் நடிகை நிவேதா தோமஸிற்கு கொரோனா

இளம் நடிகை நிவேதா தோமஸிற்கு கொரோனா

1 minutes read

இந்தியாவில் நடிகர், நடிகைகள் கொரோனா தொற்றுக்குள்ளாகி வருகிறாார்கள். அந்த வகையில் தற்போது நடிகை நிவேதா தோமஸ் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. 

நிவேதா தோமஸ், தமிழில் விஜய்யுடன் குருவி, ஜில்லா படங்களில் நடித்துள்ளார். தர்பார் படத்தில் ரஜினிகாந்த் மகளாகவும், பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் மகளாகவும் நடித்தார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

கொரோனா தொற்று குறித்து நடிகை நிவேதா தோமஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

“எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதற்காக தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். மருத்துவ விதிமுறைகளையும் கடைபிடிக்கிறேன். விரைவில் குணமடைந்து திரும்புவேன். எனக்கு ஆதரவும் அன்பும் காட்டியவர்களுக்கும் சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழுவினருக்கும் நன்றி. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், முகக் கவசம் அணியுங்கள்” என்று கூறியுள்ளார். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More