Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சக்திவாய்ந்த படம் | தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டிய ஐபிஎஸ் அதிகாரி

சக்திவாய்ந்த படம் | தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டிய ஐபிஎஸ் அதிகாரி

1 minutes read

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.சக்திவாய்ந்த படம் - தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டிய ஐபிஎஸ் அதிகாரிமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் ஹீரோயினாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் லட்சுமி பிரியா, நட்டி நட்ராஜ், யோகிபாபு, லால், கவுரி கிஷான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தாணு தயாரித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, கடந்த 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தைப் பார்த்த பலரும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் உட்பட படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். 

அந்தவகையில், கர்ணன் படத்தை பார்த்து ரசித்த திருப்பத்தூர் எஸ்.பி. விஜயகுமார் ஐபிஎஸ், படம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “கர்ணன்… நியாயமற்ற அநீதிக்கு எதிராக கிளர்ந்தெழுகிறான். பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் சக்திவாய்ந்த படம். கர்ணன் நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ள சிறந்த திரைப்படம்” என குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More