Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் ஹிந்திப் படத்திற்கு இசையமைக்கும் அனிரூத்

ஹிந்திப் படத்திற்கு இசையமைக்கும் அனிரூத்

1 minutes read

தமிழ் திரை இசை உலகின் இளம் இசை அமைப்பாளரான அனிரூத், இந்தியில் தயாராகும் படத்திற்கு முதன் முறையாக இசை அமைக்கிறார்.

ஹிந்தி திரை உலகின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளருமான ஆனந்த் எல். ராய் தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்திற்கு இசையமைக்க, தமிழ் திரையிசை உலகில் இளம் இசை அமைப்பாளரான அனிரூத் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

இயக்குனர் ஆனந்த் எல். ராய், தனுஷ் நடிப்பில் வெளியான ராஞ்சனா என்ற படத்தை இயக்கியவர். தற்போது தனுஷ் மற்றும் அக்ஷய்குமார் நடிப்பில் தயாராகிவரும் ‘அற்றங்கி ரே’ என்ற படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார்.

இசை அமைப்பாளர் அனிரூத் இதற்கு முன் இயக்குனர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில்  தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான ‘டேவிட்’ படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். 

இருப்பினும் ஹிந்தியில் தயாராகும் ஆனந்த் எல். ராய் படத்திற்கு இசை அமைக்க ஒப்பந்தமாகி இருப்பதால் அவரது நேரடியான ஹிந்தி அறிமுகம் இதுதான் என குறிப்பிடலாம்.

தற்போது இயக்குனர் ஆனந்த் எல். ராய் தயாரிப்பில் அக்ஷய் குமார் நடிப்பில் ‘ரக்ஷா பந்தன்’ என்ற ஒரு படத்தையும், சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார். இதில் எந்தப் படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார் என்பது விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

இதனிடையே இளம் இசை அமைப்பாளர் அனிரூத், தற்போது கமலஹாசன் நடிப்பில் தயாராகி வரும் ‘இந்தியன் 2’ மற்றும் ‘விக்ரம்’ படத்திற்கும், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘D44’ என்ற படத்திற்கும், இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் ‘தளபதி 65’ படத்திற்கும் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More