செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ‘வலிமை’ ரிலீசுக்கு முன்பே அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

‘வலிமை’ ரிலீசுக்கு முன்பே அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

0 minutes read

நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது.

வலிமை படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளனர்.

இதனிடையே அஜித்தின் 61-வது படம் குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது. அதன்படி இப்படத்தையும் எச்.வினோத் தான் இயக்க உள்ளார்.

ஏற்கனவே அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை இயக்கிய எச்.வினோத், இப்படத்தின் மூலம் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்கிறார்.

இந்நிலையில், அஜித் நடிக்க உள்ள 61-வது படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பை அக்டோபர் மாதம் தொடங்க ஏற்பாடுகள் நடப்பதாகவும், கதாநாயகி உள்ளிட்ட பிற நடிகர்- நடிகைகளை தேர்வு செய்யும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.