செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர் நட்டியுடன் இணையும் ஷில்பா

நடிகர் நட்டியுடன் இணையும் ஷில்பா

1 minutes read

அறிமுக இயக்குனர் ஹாரூன் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக நடித்து வரும் நடிகர் நட்டி என்கிற நட்ராஜுக்கு ஜோடியாக நடிக்க நடிகை ஷில்பா மஞ்சுநாத் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

விஜய் அண்டனி நடித்த ‘காளி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இப்படத்தைத் தொடர்ந்து இளம் நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக ‘ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்ற படத்தில் நடித்து, ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார். 

இவர் தற்போது அறிமுக இயக்குனர் ஹாரூன் இயக்கத்தில் தயாராகிவரும் பெயரிடப்படாத சைக்கோ திரில்லர்  படத்தில் கதையின் நாயகனாக நடிக்கும்  நட்டி என்கிற நட்ராஜுக்கு ஜோடியாக நடிக்கிறார். 

இப்படத்தில் இவர்களுடன் ‘பிளாக் ஷீப்’ நந்தினி, சாஷ்வி பாலா, ப்ரீத்தி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். ட்ரீம் ஹவுஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வி. எம். மணிவேலன் இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்தப்படத்தில் ‘சதுரங்க வேட்டை’, ‘நம்ம வீட்டு பிள்ளை’, ‘கர்ணன்’ படப் புகழ் நாயகன் நட்டி என்கிற நட்ராஜுக்கு நான்கு நடிகைகள் ஜோடியாக நடிக்கவிருப்பதாகவும், அதில் ஒருவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.