செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கீர்த்தி சுரேஷின் ‘குட்லக் சகி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கீர்த்தி சுரேஷின் ‘குட்லக் சகி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

1 minutes read

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘குட்லக் சகி’. நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வழங்கும் இந்தத் திரைப்படத்தை வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர் நிறுவனத்தின் கீழ் சுதீர் சந்திர பதிரி தயாரித்துள்ளார்.

விளையாட்டு, காதல், நகைச்சுவைப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதி பினிஷெட்டி மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் கீர்த்தி சுரேஷ் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து கடந்த ஆண்டு ஜூன் மாதமே வெளியாக வேண்டிய இப்படம் கொரோனா அச்சுறுத்தலால் டிசம்பர் 31ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்த்த இப்படம் தேதி குறிப்பிடமால் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், இப்படம் வரும் ஜனவரி 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக பிரத்யேக போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.