Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

1 minutes read

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். பாண்டிராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் சூர்யாவுடன் சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பிப்ரவரி 4-ஆம் தேதி இப்படம் ரிலீஸாகும் என்று படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர். கொரோனா தாக்கம் குறையாத காரணத்தால், 50 சதவிகிதம் இருக்கைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு இருப்பதால், படக்குழுவினர் ரிலீஸ் தேதியை மாற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூர்யா

பிப்ரவரி மாதம் 17 அல்லது 18 ஆம் தேதி எதற்கும் துணிந்தவன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More