செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ‘பேய் பிடிச்சிருக்கு ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

‘பேய் பிடிச்சிருக்கு ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

0 minutes read

புதுமுக நடிகர் அண்ணாதுரை கதையின் நாயகனாக நடிக்கும் ‘பேய் பிடிச்சிருக்கு’ திரைப்படம் குடும்பத்துடன் கூடிய ஹாரர் திரில்லராக தயாராகி வருகிறது என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் இளவரசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பேய் பிடிச்சிருக்கு’ திரைப்படத்தில் அண்ணாதுரை, விஜயகணேஷ், சாரப்பாம்பு சுப்புராஜ், வெங்கடேஷ், துருவன் நரேஷ், மாஸ்டர் சரண்வாஷ், செல்வி முத்ரா, ஜெயந்தி மாலா, ஹெலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

நித்தின் மற்றும் அவரது குழுவினர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.

ஃபேமிலி ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரைட் ஃபிங்கர் மூவி கிரியேஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சி. அண்ணாதுரை மற்றும் ராமஜெயம் அண்ணாதுரை ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்திருப்பதால் படத்தைப் பற்றி குறைந்தபட்ச எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.