பிரசாந்த் நீல்-பிரபாஸ் கூட்டணி படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக ‘சலார்’ திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ‘பாகுபலி’ திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் சலார் படத்தையும் தயாரிக்கிறது.

சலார் படத்தின் அப்டேட் குறித்த தகவலை தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் வரும் ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று பகல் 12.58 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் அறிவித்தபடி சலார் திரைப்படம் அடுத்த வருடம் (2023) செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகவுள்ள இப்படத்தின் அறிவிப்பை ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.

ஆசிரியர்