பிரபாஸின் ‘சலார்’ படத்தின் வெளியிட்டு திகதி அறிவிப்பு

‘பாகுபலி’ படப் புகழ் பான் இந்திய சுப்பர் ஸ்டார் நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் பிரம்மாண்ட பட்ஜட் படைப்பான ‘சலார்’ படத்தின் வெளியீட்டு திகதியை புதிய போஸ்டரை வெளியிட்டு பட குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் இந்திய மதிப்பில் ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்து சாதனைப் படைத்த ‘கே ஜி எஃப்’ படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், ‘கே ஜி எஃப்’ பட புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பான் இந்திய சுப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘சலார்’ .இதில் பிரபாசுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.

இவர்களுடன் மலையாள நடிகர் பிருத்விராஜ், ஜெகபதி பாபு, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். முழு நீள எக்சன் படமான ‘சலார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, பெரும் தாக்கத்தையும், நேர்மறையான அதிர்வையும் ஏற்படுத்தி இருந்தது.

‘சலார்’ படத்தில் பிரபாஸின் கதாபாத்திர தோற்றப் புகைப்படத்தை காண்பதற்காக ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருந்தார்கள்.

ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில், இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டதுடன், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம திகதியன்று சலார் வெளியாகும் என படத்தின் வெளியீட்டு திகதியையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

கே ஜி எஃப் படக்குழுவினரும், பாகுபலி நாயகனும் இணைந்திருப்பதால் சலார் படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

ஆசிரியர்