Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மீண்டும் கமலுடன் இணையும் ஆன்ட்ரியா

மீண்டும் கமலுடன் இணையும் ஆன்ட்ரியா

0 minutes read

மீண்டும் கமலுடன் இணையும் ஆன்ட்ரியா  உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகயிருக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது என்பதும் ’பொன்னின் செல்வன் 2’ திரைப்படத்தின் ரிலீசுக்கு பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’நாயகன்’ படத்திற்கு பின் கமல்ஹாசன், மணிரத்னம் மீண்டும் இணையும் இந்த படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெளியான தகவலின்படி இந்த படத்தில் இன்னொரு பிரபல ஹீரோயின் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் ஆண்ட்ரியாவும் அதற்கு ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More