Tuesday, May 21, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2’ படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு

மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2’ படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு

1 minutes read

‘அகில உலக சுப்பர் ஸ்டார்’ மிர்ச்சி சிவா  கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை இயக்குநர்களும், நடிகர்களுமான எஸ். ஜே. சூர்யா, வெங்கட் பிரபு, ஆர். ஜே. பாலாஜி, ஆதிக் ரவிச்சந்திரன், இயக்குநர் ராம்குமார், இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து அவர்களது இணைய பக்கங்களில் வெளியிட்டனர்.

அறிமுக இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘சூது கவ்வும்’. இந்த திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, ஹரிஷா, ராதாரவி, கருணாகரன், எம். எஸ். பாஸ்கர், கராத்தே கார்த்தி, ரமேஷ் திலக், யோக் ஜேபி, அருள் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கார்த்திக் கே. தில்லை ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி. வி. குமார் தயாரிக்கிறார்.

இதனிடையே இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டில் வெளியான ‘சூது கவ்வும்’ எனும் திரைப்படத்தின் பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாகவும், இரண்டாம் பாகமாக தயாராகும் இந்த திரைப்படத்தின் மோசன் போஸ்டரிலும், பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதால் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் சிறப்பாக இருக்கும் என திரையுலகினர் அவதானிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More