Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பொன்னியின் செல்வனில் அறிமுகமான நட்சத்திர வாரிசு

பொன்னியின் செல்வனில் அறிமுகமான நட்சத்திர வாரிசு

1 minutes read

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் இளம் வயது நந்தினி கதாபாத்திரத்தில் அறிமுகமாகியிருக்கும் நடிகை நிலா, நட்சத்திர வாரிசு என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

‘கற்பூர முல்லை’ எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் மலையாள நடிகை ஸ்ரீ கன்னிய பாரதி. அதைத்தொடர்ந்து மலையாள படங்களில் தீவிர கவனம் செலுத்தி நடித்து வந்த இவர், சில தமிழ் திரைப்படங்களிலும், ஏராளமான தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார்.

அத்துடன் 2019 ஆம் ஆண்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

இவர் இயக்குநரும், நடிகருமான கவிதா பாரதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் வாரிசான நிலா.. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் எனும் திரைப்படத்தில் இளம் வயது ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்தில் நடித்து, நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார்.

இளமையும், அழகும் நிறைந்த நிலாவிற்கு திரையுலகிலிருந்து ஏராளமான பாராட்டுகள் குவிந்து வருகிறது. விரைவில் இவர் கதாநாயகியாக அறிமுகமாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More