June 7, 2023 6:17 am

அசோக் செல்வனின் ‘போர் தொழில்’ படத்தின் டீஸர் வெளியீடு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனான காவலர் வேடத்தில் நடித்திருக்கும் ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் முதல் திரைப்படம் ‘போர் தொழில்’ .இதில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். புலனாய்வு திரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ், எப்ரியஸ் ஸ்டுடியோ மற்றும் அப்ளாஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சமீர் நாயர், தீபக் செகல், முகேஷ் மேத்தா, சி வி சாரதி, பூனம் மெஹ்ரா மற்றும் சந்தீப் மெஹ்ரா ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.

‘போர் தொழில்’ படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது.  டீஸரில் தொடர் கொலைகளை செய்யும் சைக்கோ கொலைக்காரனைப் பற்றியும், அவரை துப்பறிந்து நெருங்கும் காட்சிகளும் இடம்பெற்றிருப்பதாலும், அசோக் செல்வன் மற்றும் சரத்குமாரின் தோற்றப் பொலவு கவர்ந்திருப்பதாலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் ஒன்பதாம் திகதியன்று வெளியாகிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்