Friday, May 3, 2024

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா விஜய் சேதுபதியின் பாணியில் ஒரு வில்லத்தனம் காட்ட உள்ள உலகநாயகன்

விஜய் சேதுபதியின் பாணியில் ஒரு வில்லத்தனம் காட்ட உள்ள உலகநாயகன்

1 minutes read

நாயகனாக நடித்தாலும், எதிர்நிலை நாயக கதாபாத்திரத்திலும் நடித்து தன் நடிப்பு திறமையை நிரூபித்து வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பாணியை பின்பற்றுகிறார் கமலஹாசன்.

திரையில் எந்த கதாபாத்திரத்தில் தோன்றுகிறோமோ அந்த கதாபாத்திரத்திற்கான உழைப்பையும், நடிப்பையும் அளித்து ரசிகர்களை வசப்படுத்தினார்.

அதிலும் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படத்தில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்தப் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு உலகநாயகன் கமல்ஹாசனும் இவரது பாணியை பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்.

எந்த மொழியில் நடித்தாலும் நாயகனுக்குரிய முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்து வரும் உலக நாயகன் கமல்ஹாசன், தற்போது தெலுங்கில் முன்னணி இயக்குநரான நாக் அஸ்வின் இயக்கத்தில் பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்கும் ‘ப்ராஜெக்ட் கே’ எனும் திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தில் நடைபெறும் என்றும், அதன்போது பிரபாஸ் -உலகநாயகன் கமல்ஹாசன் மோதும் காட்சிகள் படமாக்கப்படவிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More