செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்பட பாடல் நாளை வெளியாக உள்ளது.

‘கிங் ஆஃப் கோதா’ திரைப்பட பாடல் நாளை வெளியாக உள்ளது.

1 minutes read

‘கிங் ஆஃப் கோதா’ திரைப்பட பாடல் நாளை வெளியாக உள்ள நிலையில் ரசிகரின் எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளதாக கூறப்படுகிறது . கேரளாவின் சிறந்த நடிகரான மம்முட்டியின் இளைய மகனான துல்கர் சல்மானின் 11 வருடகால சினி வாழ்க்கையில் திருப்புமுனையாக  அமைய இருக்கும் மாபெரும் படமாக உள்ளது.

‘கிங் ஆஃப் கோதா’இப்படத்தை இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்க ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பாடலான ‘கலாட்டாக்காரன்’ பாடல் நாளை (ஜூன் 28) வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் ‘கலாட்டாக்காரன்’ பாடலின் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்போது சமகாலத்தில் வெளியாகிய பாடல்கள் மக்கள் மத்தியில் சக்கை போடு போட்டுள்ள நிலையில் நாளை வெளியாக உள்ள இந்த பாடலும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பெற உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.