இசையமைப்பாளர் அனிருத் இசையில் அடுத்ததாக ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ஆம் திகதி ஹிந்தி, தமிழ். தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஜவான் படம் வெளியாக இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஜவான் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் ஷாருக்கான், அட்லீ, அனிருத், விஜய்சேதுபதி என அனைவரும் கலந்துகொண்டார்கள்.
அப்போது விழாவிற்கு மாஸ் எண்டரி கொடுத்த ஷாருக்கான் அனிருத்தை கட்டியணைத்து பாசத்துடன் கன்னத்தில் முத்தமிட்டார்.
இதைப்போல, ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் போது நடிகர் ரஜினிகாந்த் அனிருத்துக்கு முத்தம் கொடுத்து படத்தில் சூப்பரான பின்னணி இசையை கொடுத்து அதிர வைத்திருந்ததை வெளிப்படுத்தினார்.