October 4, 2023 1:14 pm

பாரதிராஜா நடிக்கும் ‘மார்கழி திங்கள்’ படத்தின் டீசர் வெளியீடு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘மார்கழி திங்கள்’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்தியாவின் முத்திரை பதித்த இயக்குநரான மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார்.

நடிகரான மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘மார்கழி திங்கள்’. இத்திரைப்படத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, இயக்குநரும், நடிகருமான சுசீந்திரன், அறிமுக நாயகன் ஷியாம் செல்வன், அறிமுக நடிகை ரக்ஷனா, அப்புகுட்டி, ஜோர்ஜ் விஜய், சூப்பர் குட் சுப்பிரமணி, நக்ஷா, ஷர்மிளா, கோவை சாவித்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். தாத்தா- பேத்தி இடையேயான உறவை மையப்படுத்தி கிராமிய பின்னனியிலான காதல் கதையாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் நடிகரும், இயக்குநருமான சுசீந்திரன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. டீசரின் பாடசாலையில் பயிலும் மாணவ மாணவிகளின் காதல் காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் இளைய தலைமுறையினரை பெரிதும் கவர்ந்திருக்கிறது. மேலும் இந்த திரைப்படமும் ஆணவ கொலை, சாதிய பிரச்சனை.. போன்றவற்றை முன்னிலைப்படுத்திய கிராம பின்னணியிலான படைப்பாக இருக்கும் என அவதானிக்கப்படுகிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்