செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஜெயம் ரவி நடிக்கும் ‘சைரன்’ படத்தின் ப்ரீ-லுக் போஸ்டர் வெளியீடு

ஜெயம் ரவி நடிக்கும் ‘சைரன்’ படத்தின் ப்ரீ-லுக் போஸ்டர் வெளியீடு

1 minutes read

தமிழ் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திரமாக இருபது ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து வரும் நடிகர் ஜெயம் ரவியின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் தயாராகி வரும் ‘சைரன்’ எனும் திரைப்படத்தின் பிரீ- லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் அண்டனி பாக்யராஜ் இயக்கத்தின் தயாராகும் முதல் திரைப்படம் ‘சைரன்’. இதில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ்.கே. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜெயம் ரவி இரண்டு வேடத்தில் நடித்து வரும் இப்படத்தில் அவரது ஒரு கதாபாத்திரத்தின் தோற்றம் ப்ரீ -லுக் போஸ்டராக வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் அவர் சால்ட் & பெப்பர் லுக்கில் தோன்றுவதும், நிலை குத்திய பார்வையுடன் தேநீரை பருகுவதும்.. அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

இதனிடையே இயக்குநர் ஆண்டனி பாக்கியராஜ் தமிழ் திரையுலகில் வெற்றி பெற்ற விஷாலின் ‘இரும்புத்திரை’, அஜித்தின் ‘விஸ்வாசம்’, சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ ஆகிய திரைப்படங்களின் உருவாக்கத்தில் பாரிய பங்களிப்பினை வழங்கி இருப்பதாலும், அவரது இயக்கத்தில் உருவாகும் முதல் படைப்பு என்பதாலும், ‘சைரன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.‌

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.