December 2, 2023 10:36 pm

விஜய் அண்டனி நடிக்கும் ‘ரத்தம்’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான விஜய் அண்டனி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ரத்தம்’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஒரு நாள்..’ எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. பாடலுடன் பிரத்யேக காணொளியும் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் சி. எஸ். அமுதன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ரத்தம்’. இதில் விஜய் அண்டனி, மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி, ஜெகன், கலைராணி, ஜான் மகேந்திரன், மீஷா கோஷல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கண்ணன் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கமல் போக்ரா பங்கஜ் போக்ரா, லலிதா தனஞ்செயன், பி. பிரதீப் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

ஒக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பாடலை பாடலாசிரியர் அறிவு எழுதியிருக்க, இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன் இசையில் பாடகர்கள் விஜய் அண்டனி மற்றும் அறிவு இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்த பாடலுடன் பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருப்பதால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்