Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர் ரவி தேஜா நடிக்கும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் ரவி தேஜா நடிக்கும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

1 minutes read

தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான ரவி தேஜா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் வம்சி இயக்கத்தில் தயாராகி இருக்கும் பான் இந்திய திரைப்படம் ‘டைகர் நாகேஸ்வரராவ்’.

இதில் ரவி தேஜா, பொலிவுட் நடிகை நூபுர் சனோன், காயத்ரி பரத்வாஜ், ஜிஷு சென்குப்தா, அனுபம் கேர், முரளி சர்மா, ஹரிஷ் பெராடி, ஆடுகளம் நரேன் நாசர் அனுகீர்த்தி வாஸ், சுதேவ் நாயர்  உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆர் மதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். உண்மை சம்பவத்தை தழுவி எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஒக்டோபர் 20ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் முன்னோட்டம் இன்று மும்பையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வின்போது வெளியிடப்பட்டது.

முன்னோட்டத்தில் 1970களில் ஆந்திராவில் உள்ள ஸ்டூவர்ட்பூரம் எனும் பகுதியில் வாழ்ந்த டைகர் நாகேஸ்வரராவ் என்ற திருடனின் வாழ்க்கை வரலாறை தழுவி பல காட்சிகள் இடம்பெற்று இருப்பதாலும், ஆக்ஷன் காட்சிகளும், அதிரடி சண்டை காட்சிகளும் இடம்பெற்று இருப்பதுடன் கவர்ச்சி பாடல், நூபுர் சனோனின் அழகு.. என பல அம்சங்களும் இருப்பதால் இந்த திரைப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More