Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சிரிக்க வைக்கும் கீர்த்தி சுரேஷ்!

சிரிக்க வைக்கும் கீர்த்தி சுரேஷ்!

0 minutes read

கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரகு தாத்தா’ படத்தின் ப்ரமோ வீடியோ ஒன்றை தயாரிப்பு தரப்பு நேற்று வெளியிட்டிருக்கிறது. அதில், கதாநாயகியின் பெயர் கயல்விழி என்றும் நகைச்சுவைக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவு பெற்றுவிட்ட நிலையில், அதன் பின் தயாரிப்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.

நீண்ட நாட்களுக்குப் பின், தமிழ் திரையுலகில் கதாநாயகியை மையமாகக் கொண்ட நகைச்சுவைப் படம் – அதுவும், சிறந்த நடிப்பாற்றல் மிக்க கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகவிருப்பதால், ரகு தாத்தாவுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணமிருக்கிறது.

சுமன் குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார் ஷேன் ரோல்டன். தேவதர்ஷினி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படத்தின் முன்னோட்டம் மற்றும் வெளியீட்டு திகதி வெகுவிரைவில் வெளியாகும் என்றும் தயாரிப்புத் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More