விஜய் நடிப்பில் வெளியான வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரபல நடிகை நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.விஜய்விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சாதனை படைத்தது. மேலும் இந்த பாடலுக்கு பல நடிகர்கள், நடிகைகளும் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டார்கள்.

இந்நிலையில், நேரம், நய்யாண்டி, ராஜா ராணி போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்த நஸ்ரியாவும் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள். மேலும் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/nazriyafahadh/?utm_source=ig_embed