செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா வருங்கால கணவர் ஜோர்ஜின் புகைப்படங்களை நீக்கிய எமி ஜாக்சன்

வருங்கால கணவர் ஜோர்ஜின் புகைப்படங்களை நீக்கிய எமி ஜாக்சன்

0 minutes read

நடிகை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து வருங்கால கணவர் ஜோர்ஜ் உடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட அனைத்து படங்களையும் திடீரென்று நீக்கியுள்ளார்.

லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஐ, தெறி, தாண்டம், கெத்து, தங்கமகன், 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். 

இங்கிலாந்தை சேர்ந்த ஜோர்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து வந்த எமி ஜாக்சன், திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்றுக் கொண்டார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு நிச்சயதார்த்தம் முடிந்தது.

இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து வருங்கால கணவர் ஜோர்ஜ் உடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட அனைத்து படங்களையும் திடீரென்று நீக்கி உள்ளார்.

இதனையடுத்து, இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக தகவல் பரவி வருகிறது. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.