Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் வில்லன் நடிகரை அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றிய மணிரத்னம்

வில்லன் நடிகரை அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றிய மணிரத்னம்

1 minutes read

பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வரும் மணிரத்னம் வில்லன் நடிகரை அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றி இருக்கிறார்.வில்லன் நடிகரை அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றிய மணிரத்னம்கடந்த 2004-ம் ஆண்டில் வெளியான ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லால். அதை தொடர்ந்து சண்டக்கோழி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அதை தொடர்ந்து மருதமலை, ஓரம் போ, ஆழ்வார் போன்ற படங்களில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தினார்.

மலையாளப் படங்களில் ஹீரோவாக நடித்து இருந்தாலும், தமிழில் பெரும்பாலான படங்களில் அவர் வில்லனாகவே நடித்தார். விரைவில் வெளிவரவுள்ள ‘கர்ணன்’ படத்திலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.

லால்

இந்நிலையில் லால் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திலும் அவர் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. எனினும், தன்னுடைய வில்லன் தோற்றத்தை மாற்றி முற்றிலும் வித்தியாசமான கெட்-அப் போட்டுள்ளார் லால்.
இந்த கெட்-அப்பில் அவரை யாரும் அடையாளம் காண முடியாது. அந்த அளவிற்கு இயக்குனர் மணிரத்னம் அவரை மாற்றி இருக்கிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More