Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா தனுஷ் நடிக்கும் ‘மாறன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தனுஷ் நடிக்கும் ‘மாறன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

1 minutes read

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கு ‘மாறன்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘துருவங்கள் பதினாறு’, ‘மாஃபியா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘மாறன்’. 

இதில் நடிகர் தனுஷ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘மாஸ்டர்’ பட புகழ் நடிகை மாளவிகா மோகனன் நடிக்கிறார். 

இவர்களுடன் சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், மகேந்திரன், கே.கே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விவேகானந்த் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

இந்தப் படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர்கள் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கிறார்கள்.

தனுஷின் பிறந்த நாளான இன்று அவர் நடிப்பில் தயாராகி வரும் ‘D43 ‘என பெயரிடப்பட்டிருந்த படத்திற்கு ‘மாறன்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. 

கையில் பேனாவுடன் எக்சன் நாயகன் தோற்றத்தில் வெளியாகியிருக்கும் தனுஷின் இந்த ஃபர்ஸ்ட் லுக்கிற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More