செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் ஜாக்டா திட்டத்துக்கு இங்கிலாந்து அரசு அனுமதி அளித்தது

எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் ஜாக்டா திட்டத்துக்கு இங்கிலாந்து அரசு அனுமதி அளித்தது

1 minutes read

வடகடலில் உள்ள ஜாக்டா (Jackdaw) எரிவாயு வயலில் அகழ்வாராய்ச்சி செய்து எரிவாயுவைப் பிரித்தெடுக்க இங்கிலாந்து அனுமதி அளித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் இம்மாத இறுதிக்குள்ளாகவே இங்கிலாந்து வீடுகளுக்கும் வணிகங்களுக்கும் எரிவாயு விநியோகம் தொடங்கும் என்றும், இது மில்லியன் கணக்கான வீடுகளுக்கு வெப்பமளித்து, நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

ஜாக்டா திட்டம் அதன் உச்சக்கட்ட உற்பத்தியின் போது நாட்டின் உள்நாட்டு எரிவாயு உற்பத்தியை சுமார் 6% அதிகரிக்கும் என்றும், 11 ஆண்டுகள் வரை எரிவாயுவை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தால் இந்த குளிர்காலத்தில் மக்களின் மின்சார மற்றும் எரிபொருள் கட்டணங்கள் குறையாது என்று ஆற்றல் துறைச் செயலாளர் மியாட்டா ஃபான்புல்லே (Miatta Fahnbulleh) தெளிவுபடுத்தியுள்ளார். இத்திட்டம் இங்கிலாந்தின் மொத்த எரிவாயு தேவையில் 3 சதவீதத்துக்கும் குறைவாகவே பூர்த்தி செய்யும்.

எண்ணெய் மற்றும் எரிவாயு பிரித்தெடுப்பில் கிடைக்கும் வரி வருவாயைக் கொண்டு புதிய “ஆற்றல் வள நிதி” உருவாக்கப்படும் என்று நிதி அமைச்சர் ஜான் ஹீலி அறிவித்துள்ளார். இதில் முதற்கட்டமாக £2 பில்லியன் முதலீடு செய்யப்பட்டு, பசுமை ஆற்றல் மாற்றத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.

இதேவேளை, அரசின் இந்த முடிவை கிரீன்பீஸ் (Greenpeace), ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் தி எர்த் (Friends of the Earth) மற்றும் ஆக்ஸ்ஃபாம் (Oxfam) போன்ற அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளன. இங்கிலாந்தின் காலநிலை மாற்ற உறுதிமொழிகளுக்கு எதிராக அரசு செயல்படுவதாக அவை குற்றஞ்சாட்டியுள்ளன.

பசுமைக் கட்சி இத்திட்டத்தை “காலநிலை நாசவேலை” என்று விவரித்துள்ளது.

கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் கெமி பாடெனோக் அரசின் முடிவை ஆதரித்த போதிலும், முடிவெடுக்க அரசு தேவையின்றி தாமதித்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜாக்டா திட்டத்துக்கு முதன்முதலில் 2022இல் ஒப்புதல் அளிக்கப்பட்ட போதிலும், சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த சட்டப் போராட்டங்களால் தாமதமானது. இலண்டனில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அரசுக் கட்டிடங்களுக்கு வெளியே திரண்டு போராட்டம் நடத்தினர்.

ஷெல் (Shell) நிறுவனம் அரசின் இந்த முடிவை நாட்டின் ஆற்றல் பாதுகாப்பிற்கும் பொருளாதாரத்துக்கும் ஒரு முக்கிய கட்டம் என வரவேற்றுள்ளது.

Unite மற்றும் GMB ஆகிய தொழிலாளர் சங்கங்கள் இந்த முடிவை வரவேற்று, வடகடல் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கவும் ஆற்றல் பாதுகாப்பை உறுதி செய்யவும் இது உதவும் என்று தெரிவித்துள்ளன.

எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் ஜாக்டா திட்டத்துக்கு இங்கிலாந்து அரசு அனுமதி அளித்தது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.