இங்கிலாந்தில் வாழும் தமிழ் இளைஞர்கள் மற்றும் இசை, நடன ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கும் ‘KINGS OF GAANA 2026’ நிகழ்வு, எதிர்வரும் டிசம்பர் 6ஆம் திகதி இலண்டனில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
தொடர்ச்சியாக 14ஆவது ஆண்டாக நடைபெறும் இந்தப் போட்டி, உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான குத்து நடனப் போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இலண்டனிலுள்ள TROXY அரங்கில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், இங்கிலாந்தின் 08 முன்னணி பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று, தங்களது நடனத் திறமையையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தவுள்ளனர்.
இதில் Aston University, University of Cambridge, Cardiff University, City, University of London, Imperial College London, King’s College London, St George’s, University of London மற்றும் University College London ஆகிய பல்கலைக்கழகங்கள் போட்டியிடவுள்ளன.
08 பல்கலைக்கழகங்கள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், இறுதியில் ‘KINGS OF GAANA 2026’ பட்டத்தை வெல்லப்போகும் பல்கலைக்கழகம் எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
நிகழ்வு தொடர்பான விபரங்கள்
திகதி: 2026 டிசம்பர் 6, ஞாயிற்றுக்கிழமை
இடம்: TROXY, 490 Commercial Road, London, E1 0HX
கதவுகள் திறப்பு: மாலை 5.00 மணி
நிகழ்ச்சி ஆரம்பம்: மாலை 5.30 மணி
இறுதி அனுமதி: மாலை 6.00 மணி
ஆடை நடை: Smart Casual
வயது வரம்பு: 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாத்திரம்.
நுழைவுச்சீட்டுக் கட்டணங்கள்
Front Stall – £38.21
Stalls – £34.73
Circle Row A – £37.05
Circle Booth – £37.05
Circle Block – £30.09
நுழைவுச்சீட்டுகளை KINGS OF GAANA, Ticketmaster மற்றும் TROXY ஆகிய இணையத்தளங்கள் ஊடாக இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும்.
இங்கிலாந்தில் வாழும் தமிழ் இளைஞர்களின் கலைத்திறன், இசை மற்றும் கலாசாரப் பங்களிப்பை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக எதிர்பார்க்கப்படும் KINGS OF GAANA 2026 நிகழ்வுக்கு ‘வணக்கம் இலண்டன்’ ஊடக அனுசரணை வழங்குகின்றது.