Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் தற்காலத் தமிழ் அகராதியை உருவாக்கிய இலக்கிய ஆளுமை! | முருகபூபதி

தற்காலத் தமிழ் அகராதியை உருவாக்கிய இலக்கிய ஆளுமை! | முருகபூபதி

4 minutes read

அஞ்சலிக்குறிப்பு:

‘ க்ரியா  ‘எஸ். ராமகிருஷ்ணன்

தற்காலத் தமிழ் அகராதியை நீண்டகால உழைப்பில் வரவாக்கிய இலக்கிய ஆளுமை !

க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் காலமானார் - தமிழுக்கு அவரது பங்களிப்பு என்ன? - BBC  News தமிழ்

க்ரியா இராமகிருஷ்ணன் இம்மாதம் நவம்பர்17ஆம் திகதி, அதிகாலை சென்னையில் கொரோனோ தொற்றின் தாக்கத்திலிருந்து மீளாமலேயே நிரந்தரமாக விடைபெற்று விட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது.

க்ரியா இராமகிருஷ்ணனின் திடீர்மறைவு தமிழ் இலக்கிய உலகில் ஏற்படுத்தியிருக்கும் வெற்றிடத்தை இனி யார் நிரப்புவார்கள்..?என்ற வினா மனதில் நிழலாட இந்த அஞ்சலிக் குறிப்பினை பதிவு செய்கின்றேன்.

மகாகவிபாரதியின்அந்திமாகாலத்திற்குமுக்கியகாரணமாகவிளங்கியசென்னை  திருவல்லிக்கேணிபார்த்தசாரதிகோயிலின்பிரகாரத்தில்,  எழுபத்தியைந்துஆண்டுகளுக்குமுன்னர்நடந்தஒருஉண்மைச்சம்பவத்துடன்இந்தஅஞ்சலிக்குறிப்பினைஆரம்பிக்கின்றேன்.

ஒரு  பெரியகுடும்பம்  அங்குதரிசனத்துக்குச்  சென்றது.   அதில்   பத்துப்பதினைந்து  பேர்  ஆண்கள், பெண்கள் , குழந்தைகள்,  முதியவர்கள்  இருந்தார்கள்.

அதில்  அத்தை   உறவான  ஒரு  பெண்  சற்று  நோய்வாய்ப்பட்டுஎப்பொழுதும்  சோர்வாக  இருப்பவர்.   நோஞ்சான்  என்றுவைத்துக்கொள்ளுங்கள்.   ஒரு  சிறிய  குழந்தை  வாட்டசாட்டமான  கொழு கொழுஎன்று  கொழுத்த  குழந்தை. தூக்கினால்சற்று  பாரமான  குழந்தை.

இருவரையும்   அழைத்துக்கொண்டு  அந்தக்கோயிலை  சுற்றிவந்து  தரிசிப்பது  அந்தப்பெரியகுடும்பத்திற்கு  சிரமமாகஇருந்திருக்கிறது.   நோய்வாய்ப்பட்ட  அத்தை,  

” தன்னிடம் குழந்தையை விட்டுவிட்டு  போய்வாருங்கள்  நான்பார்த்துக்கொள்கின்றேன்”   என்றார்.   உடனே   மற்றவர்களும்  அதற்குசம்மதித்து   குழந்தையஒரு படுக்கைவிரிப்பில்  கிடத்திவிட்டுஅத்தையை  பார்த்துக்கொள்ளச்சொல்லிவிட்டு  சென்று  விட்டார்கள்.

அத்தைக்கு  உறக்கம்  கண்களை   சுழற்றியிருக்கிறது.  அந்தக்கோயில்தூணில்    சாய்ந்துவிட்டார்.   தரையில்  குழந்தையும்  ஆழ்ந்த  உறக்கம்.

என்ன  நடந்திருக்கும்…?  அந்தக்கோயிலுக்கு  வந்த  பக்தர்கள்   யாரோ  ஏழைப்பெண்  குழந்தையை  தரையில்  கிடத்திவிட்டு  பிச்சைக்கு  காத்திருக்கிறாள்  என்று  நினைத்துக்கொண்டு தத்தம்கைகளில்    இருந்த  சில்லறைக்காசை  போட்டுவிட்டுபோய்விட்டார்கள்.

கோயிலைச்சுற்றிப்பார்க்கச்சென்றஉறவினர்கள்  வந்து  பார்த்துஅதிர்ச்சி    அடைந்தனர்.    நடந்திருப்பதை  ஊகித்துக்கொண்டு  தரையில்    கிடந்த  சில்லறைகளை   எடுத்து  கோயில்  உண்டியலில்போட்டுவிட்டு   குழந்தையையும்  தூக்கிக்கொண்டு,  அந்தஅத்தையையும்    அழைத்துச்சென்றார்களாம்.

   அந்தக்குழந்தைதமிழ்உலகில்ஆளுமைமிக்கசெயற்பாட்டாளராகவளர்ந்துதனது 75 வயதுபராயத்தில்இம்மாதம்நவம்பர் 17 ஆம்திகதிசென்னையில்மறைந்துவிட்டார். அவர்தான்‘க்ரியா’  இராமகிருஷ்ணன்.       அவருடைய  க்ரியா  

பதிப்பகம்  1992இல்பெறுமதிமிக்க  தற்கால  தமிழ்  அகராதி  நூலைதொகுத்தவெளியிட்டபோது,  தமிழகதி.மு.கஅரசுஅதனைக்கண்டுகொள்ளவில்லை.

அதன்பிரதிகளைவாங்குவதற்கானமுயற்சியில்தமிழகஅரசின்நூலகஆணையமும்முன்வரவில்லை.

ஆனால், சிங்கப்பூர்அரசு, அதனைதனதுநாட்டின்நூலகங்களுக்குபரிந்துரைசெய்துபெற்றுக்கொடுத்தது.

தமிழ்நாவல்கள்பலஎழுதியஅன்றையமுதல்வர்மு. கருணாநிதிக்குதமிழ்நாவல்நூற்றாண்டையும்மற்றவர்கள்தான்குறிப்பாகஇலங்கையிலிருந்துதான்நினைவூட்டவேண்டியிருந்தது.

க்ரியாஇராமகிருஷ்ணனின்தாய்மொழிசுந்தரத்தெலுங்கு.  ஆனால்,  அவர்தமிழுக்காகவேவாழ்ந்தவர். அவர்தனது  குழந்தைப்பருவத்துக்  கதையைத்தான்  1992 இல்முதல்பதிப்பாகவெளியிட்டதற்காலத்தமிழ்அகராதியின்தோற்றம்பற்றிக்கூறும்போதுசொல்லியிருந்தார்.

  இந்தஅகராதியின்  முன்னுரையில்  அந்தசுவாரசியமானகதையையும்குறிப்பிட்டு  பலருடைய  ஆதரவுடன்ஒரு  கோயிலுக்கு  அன்று  சிறு  உதவி  கிடைத்தது  போன்று  இந்தஅகராதியை   தயாரிக்க  பலரும்  உதவினார்கள்  எனச்சொல்லியிருந்தார்.

இந்தியாவில்சிலமாநிலங்களிலிருந்தும்இலங்கை, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, மொரீஷியஸ், முதலானநாடுகளிலிருந்தும்பலஅறிஞர்களின்ஆலோசனைகளைப்பெற்றும்இந்தஅகராதியைஅவர்தொகுத்திருந்தார்.

முதல்பதிப்பின்முன்னுரையை, அவர்நன்றியுரையாகவேஇவ்வாறுஎழுதியிருந்தார்.

“ இந்தஅகராதிநிறைவுபெற்றிருக்கும்இந்தத்தருணத்தில்திரும்பிப்பார்க்கும்போது, அந்தக்குழந்தையின்இடத்தில்இந்தஅகராதியைப்பார்க்கின்றேன். இந்தஅகராதியையாரோஒருவரின்நேர்த்திக்கடனாகநினைத்துக்கேட்கப்படாமலேயே, மனமுவந்து, மகிழ்ச்சிநிறைந்தபங்களிப்பைச்செய்தவர்கள்அநேகர். இவர்களில்ஒருவர்இல்லாதிருந்தாலும்இந்தஅகராதிமுழுமைஅடைந்திருக்காது.  இவர்கள்ஒவ்வொருவரையும்நான்கைகூப்பிவணங்குகிறேன்.  “

க்ரியாபதிப்பகத்தைஇராமகிருஷ்ணன்ஆரம்பித்தகாலத்தில்கணினிதொழில்நுட்பவசதிகள்வளங்கள்இல்லாதிருந்தமையால், நூல்களின்மூலப்பிரதிகளைகையெழுத்திலேயேபடித்தபோது, எழுத்தாளர்களின்எழுத்துப்பிழைகளைதிருத்தி, செம்மைப்படுத்தும்சிரமங்களையும்சந்தித்தவர்.

குறிப்பாகமொழிபெயர்ப்புகளுக்கானகையெழுத்துப்பிரதிகளைசெம்மைப்படுத்தும்போதுஅவருக்குஉதவியாகஇருந்தவர்அவரதுநண்பர்கே. நாராயணன்என்பவர்.

மொழிபெயர்ப்புகளில்தற்காலத்தமிழைகையாளுவதில்எதிர்நோக்கப்பட்டபிரச்சினைகளைஉடனுக்குடன்சிறியசிறியஅட்டைகளில்குறித்துவைத்திருக்கிறார்.

1980ஆம்ஆண்டுமுதல்இராமகிருஷ்ணன்அயர்ச்சியின்றிஉழைத்ததன்பெறுபேறாகத்தான்நாம்க்ரியாவின்தற்காலத்தமிழ்அகராதியைபயன்படுத்திக்கொண்டிருக்கின்றோம்.

அதன்தேவையைஅன்றையமுதல்வர்முத்தமிழ்அறிஞர்கலைஞரின்அரசுஏன்கவனத்தில்கொள்ளவில்லைஎன்பதுபேராச்சரியம்தான்.

மொழியைஇனத்தைமதத்தைவைத்துஅரசியல்நடத்துபவர்கள்சமூகத்திற்குஅவசியமானமக்களுக்கானஅரசியல்நடத்தும்காலம்வரும்வரையில்நாம்புலம்பிக்கொண்டிருக்கவேண்டியதுதான்.

இராமகிருஷ்ணன்தமதுக்ரியாவின்தற்காலத்தமிழ்அகராதியின்முதல்பதிப்பினைவெளியிட்டபோது, அதனைவாங்கியதமிழ்நாட்டின்ஒருஅரசியல்பிரமுகர்இலங்கையில்தமக்குமிகவும்பிடித்தமானஒருவருக்குபரிசாகஅனுப்பியிருந்தார்.

அந்தப்பரிசினைபெற்றவர்விடுதலைப்புலிகளின்தலைவர்வேலுப்பிள்ளைபிரபாகரன். அதனைப்பார்த்தஅவர்இந்தபெறுமதியானநூல்ஒவ்வொருதமிழ்வீடுகளிலும்இருக்கவேண்டியதுஎன்றும்தெரிவித்துள்ளார்.

எமதுதமிழ்த்தலைவர்களிடம்இந்தஅகராதிசென்றதாஎன்பதைஅவர்கேட்டுத்தெரிந்துகொண்டாராஎன்பதும்தெரியவில்லை.

இந்தஅகராதியின்முதல்பதிப்புஏன்முக்கியத்துவம்பெற்றது..?

தற்காலத்தமிழுக்கென்றேஉருவாக்கப்பட்டமுதல்அகராதி.

தற்காலத்தமிழில்சொல்லிலும்பொருளிலும்நிகழ்ந்துவரும்மாற்றங்களைஎடுத்துக்காட்டும்முதல்அகராதி.

தற்காலத்தமிழில்உள்ளசொற்களைஎடுத்துக்காட்டுவாக்கியங்களோடுவிளக்கும்முதல்அகராதி.

இந்தியமொழிகளில்கணிப்பொறியின்உதவியுடன்உருவாக்கப்பட்டமுதல்அகராதியும்இதுதான்.

15875தலைச்சொற்கள். 23883எடுத்துக்காட்டுவாக்கியங்கள் – தொடர்கள்.

பண்பாட்டுத்தொடர்புடையசொற்களுக்கான209 படங்கள்.

திருத்தியஇரண்டாம்பதிப்பினயும்வெளியிட்டிருக்கும்இராமகிருஷ்ணன்,  கடந்த 2019 ஆம்ஆண்டுதொடக்கத்தில்சென்னையில்நடந்தபுத்தகச்சந்தையின்போது,  மேலும்புதியபுதியசொற்பிரயோகங்களையும்உள்ளடக்கிமிகப்பெரியஅகராதியையும்வெளியிடவிருக்கும்எண்ணக்கருவைவெளிப்படுத்தியிருந்தவர்.

அந்தமுயற்சியின்இறுதித்தருணத்தில்எதிர்பாராதவகையில்கொரோனோதொற்றுக்குஆளாகியிருந்தஅவர்தனதுவிடாமுயற்சியைசாதித்துவிட்டேவிடைபெற்றுள்ளார்.

மரணப்படுக்கையில்தான்இருக்கிறேன்என்பதுதெரிந்தோதெரியாமலோ,   மேலும்மேலும்செம்மைப்படுத்தப்பட்டதற்காலத்தமிழ்அகராதியின்மற்றும்ஒருபதிப்பினைஎமக்குவரவாக்கிவிட்டேவிடைபெற்றிருக்கிறார்என்பதைஅறியும்போதுமனம்உறைந்துவிடுகிறது.

அவரதுக்ரியா, பலபெறுமதியானமொழிபெயர்ப்புநூல்களையும்பதிப்பித்துவெளியிட்டுள்ளது.

கடந்தமாதமும்அவுஸ்திரேலியாவில்எமதுமெல்பன்வாசகர்வட்டம்நடத்தியமாதந்தசந்திப்பில்க்ரியாவெளியிட்டகாமெல்தாவுத்எழுதியபிரெஞ்சுமொழியிலிருந்துநேரடியாக-வெ. ஶ்ரீராம்தமிழுக்குவரவாக்கியமெர்சோ: மறுவிசாரணைநாவலைத்தான்விமர்சனத்திற்குஎடுத்துக்கொண்டது.

இந்தநாவலைகாமெல்தாவுத்எழுதநேர்ந்தமைக்குஅல்பெர்காம்யுவின்நோபல்பரிசுபெற்றஅந்நியன்நாவல்தான்முக்கியகாரணம்.   இந்தநாவலுக்குஎதிர்வினையாகவெளியானதுதான்மெர்சோ: மறுவிசாரணை.

அந்நியன்நாவலையும்க்ரியாதான்வெளியிட்டது.

இதிலிருந்துக்ரியாஇராமகிருஷ்ணனின்பரந்தசிந்தனையையும்நாம்தெரிந்துகொள்கின்றோம்.

அவர்இலங்கைமற்றும்புலம்பெயர்ந்தஇலங்கைஎழுத்தாளர்கள், இலக்கியவாதிகளதும்அபிமானத்துக்குரியவர். தற்காலத்தமிழ்அகராதியின்தயாரிப்பில்இலங்கைஎழுத்தாளர்களையும்இணைத்துக்கொண்டு, இலங்கைதமிழ்பேச்சுவழக்குகளுக்கும்முக்கியத்துவம்கொடுத்தார்.

அவரதுஇழப்புஈடுசெய்யப்படவேண்டியது.

—0—

முருகபூபதி – அவுஸ்ரேலியா

letchumananm@gmail.com

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More