Thursday, April 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் உயிரோடு புதைந்து போனவர்கள்! | வசீகரன்

உயிரோடு புதைந்து போனவர்கள்! | வசீகரன்

1 minutes read
Image may contain: tree, snow and outdoor

இருள் விழுங்கிய மேகமாய் விடிந்தது
இயர்தரூம் நோர்வேயின் கிழக்குப்பகுதி!
நிலச்சரிவு புதுச்சொல் அல்ல
அல்லலோடு பிறந்த சொல்!

கண்முன் ஓடியது திரைப்படம் போல்
விழகளில் திகில் தரைப்படம் ஆனது
நிலம் பிளந்து சரிந்து போனது
நின்றது உண்டது உறங்கியதை திண்டது

வானத்தில் ஏறி அந்தரத்தில் பறந்து
ஆனந்த உலகம் சுற்றிக் களைத்தபின்
நிலத்தில் உறங்குவது போல – ஒரு
நிம்மதி இருக்காது என்போம்

ஒரு நொடி இமைப் பொழுதில்
ஓராயிரம் ஈரக்கனவுகள் சிதைந்திட
உறங்கிய நிலமும் விழித்து எழுந்திட
இலத்திரனியல் குயிலகள் ஓலமிட்டன

காவற்துறையும் உயிரைப் பணயம் வைத்தது
காடுமேட்டில் மலைகள் அழுதிட
வெண்பனி பூக்களைத் தூவிட
காவல்நாய்களும் மோப்பம் பிடித்தன

ஊரை எழுப்பிட விரைந்தது கரங்கள்
விடிய விடிய அதிர்ந்தது நிலங்கள்
உறவைத் தேடி உறவுகள் ஓடிட
ஓயாது உழைத்தனர் உத்தமர் கூட்டம்

உப்பு நிலத்திலே உயர்ந்த குடியது
சட்டதிட்டத்தின் படியே கட்டியதாம்
நிலையற்ற வாழ்வின் நிலையை உயர்த்தி
இயற்கை தன்குணத்தை காட்டியதாம்

நேரலைச் செய்திகள் நெஞ்சினைப் பிளந்தது
நேர்முக வர்ணனை நெற்றியில் அடித்தது
ஓயாத அலையென ஒப்பாரி கேட்குது
நெடுநாளாகியும் அதிர்வுகள் தொடருது

தேவதைகள் ஆசீர்வதித்திடும் நேரம்
சதுப்பு நிலத்தில் மிதந்தவர்களை..
எந்தச் சாத்தான்கள் எழுந்துவந்து
சபித்துவிட்டு இழுத்துப் போனதுவோ?

உடைந்து வீழ்ந்த வீடுகளில் சிக்கி
இதுவரை ஆறுபேர் உயிரிழந்ததாக.
உயிரிழந்த நிலையில் சடலமாக
உலங்குவானூர்தியில் ஏற்றப்படனர்

இன்னும் காணாமல் போனவர்களை
தேடிக்கொண்டே இருக்கிறார்கள்
இறந்தவர்களுக்காக இரங்கல் செய்திகள் வாசிக்கப்படுகின்றது
வீதிகளில் மெழுகுவர்த்திகள் பூக்கின்றன!

வசீகரன்
03.01.2021
ஒசுலோ
Gjerdrum 30.12.2020

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More