5
இறுதியுத்த நாட்களில் தீப்பிடித்த
காயத்தோடு
கடலில் அலைந்த உயிர்களை அறிந்ததனால்
காட்டி கொடுத்தவர்களை காட்டமுடியாது
இறந்தவர்களின் நீதி
உப்பு நீரில் கரைந்து போனபடியாலும்
உயரத்தில்
துக்கத்தின் தலையை
ஆட்டி மௌனக் கடலுக்குள்
கையறு நிலையின்
ஆழத்தில் கால் புதைத்து அழுத கண்ணீர் கதைகள் புதையுண்டு போனாலும்,
முக்கடல் சந்திப்பின் திசைப்பார்த்து
சொற்களற்று,
ஓசையின்றி
தூரத்தில் இன்னமும் எதையோ ஒளியால் தேடிக்கொண்டிருக்கிறது
அந்த கலங்கரை விளக்கு..
சீனு ராமசாமி