Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் அவுஸ்ரேலியா சங்கநாதம் ஆடற்கலையகத்தின் ‘ஆடற்தடங்கள் பெருநூல் – 2021’ வெளியீடு!

அவுஸ்ரேலியா சங்கநாதம் ஆடற்கலையகத்தின் ‘ஆடற்தடங்கள் பெருநூல் – 2021’ வெளியீடு!

3 minutes read

சங்கநாதம் ஆடற்கலையகம் சகல நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் நடன ஆற்றுகைக்கலைஞர்களின் கலையுலக வாழ்க்கை வரலாற்றை   “ ஆடற்தடங்கள்”  என்னும் பெருநூலினை தயாரிக்க உள்ளதை தங்களுக்கு அறியத்தருவதில் மகிழ்சி  அடைகின்றோம்.

உலகெலாம் வாழும்   ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நடன ஆற்றுகைக் கலைஞர்களை ஒருமித்த தளத்தில் சேர்க்கவும், அவர்களின்  வாழ்க்கை வரலாற்றை ஒரே நூலில் இடம்பெறச்செய்து உலகெலாம் பரம்பலடையச் செய்யும் நோக்குடனும்.     40 வயதிற்கு மேற்பட்ட நடன ஆற்றுகைக் கலைஞர்கள் மற்றும் நடனக்கலைஞர்களின்  வரலாற்று விபரங்களைக் கொண்ட “  ஆடற்தடங்கள்” என்னும் பெருநூல்  வெளிவர ஏற்பாடாகியுள்ளது. 

ஈழத்தினை மையமாகக் கொண்டு செயலாற்றும் இக்குழுமத்திற்கு உறுதுணையாக அனைத்து நாடுகளிலும் பணி மேம்படுத்துநர்களும் கலைஞர்களின் வரலாறுகளை சேகரிப்பாளர்களும் இயங்குவர்கள் .

நடன ஆற்றுகைக் கலைஞர்கள் என்னும் பெருநூலின்   வெளியீட்டு விழாவானது பணி முன்னெடுப்புக் குழுமத்தினரால்   தீர்மானிக்கப்படும் இடத்தில் ஒழுங்கு செய்யப்படும்.

உலகில் எப்பகுதியிலும் வாழ்ந்தாலும்  ஈழ தேசத்தை பூர்வீகமாக கொண்டு 40 வயதிற்கு மேட்பட்ட பரதநாட்டிய  ஆற்றுகைக் கலைஞர்கள் மற்றும் பரதநாட்டிய நடன ஆசிரியர்கள்  இப்பெருநூலிற்கு தமது கலையுலக வாழ்க்கை வரலாற்றை அனுப்ப முடியும். 

பரத நாட்டிய ஆற்றுகைக் கலைஞராக அல்லது ஆசிரியர்களாக  இருந்து மரணித்தவர்கள் பற்றி அவர்களின் உறவினர்களோ, உரித்துடையோரோ , மற்றும் அவர்களின் மாணவர்களோ தகுந்த உறுதிப்படுத்தலுடன் அவர்களின் வரலாற்றினையும் அனுப்பிவைக்க முடியும் 

 ஏ4 தாளின் அளவில் 5 பக்கங்களிக்கு உட்பட    எழுத்தின் அளவு 12 இருத்தல் வேண்டும்.

மின்னஞ்சல் மூலமாகவோ, நேரடியாகவோ, பணி மேம்படுத்துநர்கள் ஊடாகவோ கிடைக்கச் செய்யலாம்.

 அனுப்புபவர்  நூலில் பிரசுரிக்கத்தக்கதாக தங்களின் தனிப் புகைப்படம் மற்றும்  அவர்கள் பங்கு கொண்ட நிகழ்வுகள் அவர்கள் நெறியால்கை செய்த  நிகழ்வுகளின் முக்கிய

 புகைப்படம் அனுப்பிவைக்க வேண்டும்.

தொடர்பு கருதி தொலைபேசி எண் இடலாம். தொலைபேசி எண் பிரசுரிக்க விரும்புபவர்களின் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படும் 

பரத நாட்டிய நடன கலைஞர்களின் சுய  வரலாற்று அனுப்புவதற்கான மின்னஞ்சல் முகவரி: sanganathamdanceacademy@gmail.com

தொடர்புக்கான தொலைபேசி 

புலன் எண் +61406770300

கைபேசி எண் +61427776548

உங்களின் கலையுலக  வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகள் பெற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி: 15.03.2021

அத்தோடு குறித்த தகவலை ஏனைய ஆசிரியர்களுக்கும் பகிர்ந்து உதவுமாறு வேண்டி நிற்கின்றோம்.

நன்றி 

இயக்குநர் 

சங்கநாதம் ஆடற்கலையகம் 

அவுஸ்ரேலியா.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More