Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கதறல்களின் கோரிக்கை | யுகநாதன்

கதறல்களின் கோரிக்கை | யுகநாதன்

1 minutes read

கர்ப்பிணி தாய்களின் கதறல்கள்
கற்பனைகளோடு பள்ளி சென்ற
பிள்ளைகளின் சிதைந்த உடல்கள்
சிதறிய உறவுகளை தேடும் பணிகள்

பாதையில் சென்று
பயணத்தை அடையாமல்
பள்ளத்திற்குள் விழுந்து
பரிதாபமாய் உயிர் போகும் அவலங்கள்

வல்லமை காட்ட விளையும்
வாகன ஓட்டுநர்களே!
நம்பி வருவோரை
நல்லபடியாய் கொண்டு சேர்க்க
உள்ளம் உறுதி கொள்ளுங்களே!

போட்டி போட்டுக் கொண்டு
விட்டுக்கொடுக்க மனமின்றி
கட்டுப்பாட்டை தவறவிட்டு
காவு கொள்வதோ உயிர்களை
கழுத்துகளையும் தாண்டி வழியும்
கண்ணீரிடம் கேளுங்கள்
உயிர்களின் விலையை

ஒற்றை வினாடி
காத்திருக்க பொறுமையின்றி
அற்புதமான உயிரை
அற்பமாய் இழக்க வேண்டுமா?

பொறுப்பை உணராமல்
பரபரப்பாய் சென்று
பரிதவிக்க வைக்காதீர்
இனிமேலாவது

அதிக வேகம் தவிர்த்து
அவசர போக்கு விடுத்து
உங்களை கடவுளென நம்புவோரை
காப்பாற்றி ஊர் சேர்ப்பதே மேன்மையானது

யுகநாதன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More