நாளை மலர் நல்லுலகம் | சண்முகபாரதி

எங்கிருந்தோ மீட்டுகின்ற வீணை ஒலி –என்
இதயம் அளந்த கதை சொல்லிடவா…
பொங்கிவரும் என் இதய உணர்வுகளால் –உனை
போற்றி ஒரு காவியம் நான் தரவா

நெஞ்சினிய நல்லவர்கள் வாழ்ந்திடவும்
நெஞ்சமிலாதவரும் திருந்திடவும்
அஞ்சியிருள் ஓடிடவே எங்கணுமாய் –உன்
ஆட்சி அருள் ஓங்கிடவே இன்னமுதாய்

ஏழைமகன் வாழ்வினிலும் செல்வமருள்-கலை
வாணி உனை வாழ்த்துவதும் உன் அருளே
நாளை மலர் நல்லுலகம் உன் அறிவே-புவி
நன்றிசொல்லும் புதுமையெல்லாம் உன் அழகே.

சண்முகபாரதி

ஆசிரியர்