செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் இடம் மாறும் இருப்பு | செல்வி தமிழி

இடம் மாறும் இருப்பு | செல்வி தமிழி

0 minutes read

நீ மலைகளைக் கடக்க போகுறாய்
குன்றுகளைக் குடையப் போகிறாய்
ஆற்றைக் கடந்து உன் கனவுக் கோபுரத்தைக் கட்டிடப் போகிறாய்

இதயத்தைப் பிழிந்து வழியும் நினைவுகளைச் செதுக்கும் வழி சொல்வாய் தோழனே

எண்ணங்களைப் பெருக்கி ஏந்தும் அபலை நான்
ஏணி போல் உன் வாழ்வை உயர்த்திவிட
ஏந்திழை என்னால் இயலவில்லை

பாசத்தை குரலில் குழைத்துத் தரும் உன்னால் பரிவைத் தர முடியாது.

பரிவென்பது ஆற்றாமையைப் புரிதல்
என் ஆற்றாமையை புரியும் வண்ணங்கள் உனக்கில்லை

எங்கிருந்தோ எனை ஆளும் குரலே
என் இருப்பை இடம் மாற்றி விட்டாயே
எனதிருப்பை மீட்டு வர என் எண்ணங்களோடு போராடுகிறேன்
வெல்வது நீயல்லவா

செல்வி தமிழி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.