ஆகாயம் தொடு | சீனுராமசாமி

உயிரோடு இருப்பதென்பது
கவனமாக இருப்பது

கவனமாக
இருப்பவன்
இரையின் மீது
மையம் கொண்ட
சிறுத்தை..

வெறும்
ஆசைகள் நிரம்பியவன்
புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை.

லட்சியத்தின் பாதை நீண்டது
திரும்பவும் சொல்கிறேன்.
திரும்பாமல் போ

நேர்மையாக
உழைப்பவனுக்கு
வித்தை
விரைவு வண்டி.

காற்றுள்ள போது
தூற்றிக் கொள்
காற்றை தூற்றாதே..
ஆடிமாதம் தான் அதற்கும்
ஆகாயம் தொடும்
பலம்.

அறிவாய்
என் விழுதே..

சீனு ராமசாமி.

ஆசிரியர்