இது காவிய தேசம் | த.செல்வா

உங்கள்அழுகுரல்
கேட்டிடும் பொழுதினில்
எங்கள் இருதயம் பட்சியாய்ப் பறந்திடுமே

நாளை எதுவந்த போதிலும்
நந்திக்கடல் வரை
நம்பிக்கை காலாய் நீண்டிடுமே

வங்கக் கடல் வற்றினாலும்
எங்கள் வேட்கைக் கடல்
வற்றுமோ சிங்கா

நீங்கள் தங்க மகன் வேங்கையர்
கற்களை சுக்குநூறாக்கினும்
வற்றாத சுதந்திரப் பெருங்கடல் தானடா

கார்த்திகை என்றொருபூவினில்
புதைந்துள்ள காவியம் நமதே கேளடா

உயில் மூச்சுள்ளவரை
தமிழ்வீச்சுள்ளவரை இது நில்லாமல்
ஓடும் தேசமடா

காற்றும் நம்மைப் பாடவேண்டும்
கடலும் நம் கதை சொல்ல வேண்டும்
நிலாவும் எம்பெயர் எழுத வேண்டும்
நீள்வானம் ரிசிகளாகிப் பூக்க வேண்டும்
ஆயிரம் பாக்களை நாட்டவேண்டும்
நம் தாகம் ஒருபோதும் தணிந்திடாது
எம் ஈகம் இருளை அணைத்திடாது

இனிஎதுவந்த போதிலும்
ஈழ மண்டலம் சூழ்
சோழ மண்டலம் எங்கினும்
நம் பெயர் நதியேகப் புரள்கையில்
கார்த்திகை மைந்தரின் கல்லறை
கண்மீட்டும் காவிய தேசத்தை பாரடா…

த.செல்வா

ஆசிரியர்