செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் நாளைக்கும் நிலவு வரும் | த. செல்வா

நாளைக்கும் நிலவு வரும் | த. செல்வா

0 minutes read

உன் புகைப்படத்தின் ஒளியைக் குடித்து
பகலை இருளாக்கி நகர்கிறேன்
நிலவோ நட்சத்திரங்களோ இல்லாத தெருக்களில்
உன் முகத்தைக் களவாடிச் சுமக்கிறேன்

பிறகு உண்மையான இரவு வந்து தூங்கு எனச் சொல்கையில்
தூங்கா வனமாகித் தகிக்கிறேன்
கடலைக் குடித்த பூனையின் கனவாய்
கால நதியில் வியாபிக்கிறேன்

கற்பனைக்கும் கனவுக்குமிடையே அகதியாய் வாழ்ந்து
நாடற்ற ஈழத்தவன் போல் அடைக்கலம் தேடுகிறேன்
இப்போதெல்லாம்
“அடைக்கலம் தந்த வீடுகளே போய்வருகின்றோம் நன்றி”
பாடினாலும் எங்கு போவதென
மூளையை உருட்டு உருட்டி பார்க்கிறேன்

எந்த ஒரு தாக்கத்துக்கும் சமனான
எதிரான மறுதாக்க முண்டாம் நியூட்டனின் விதியி லேறி
அசுர மதியைக் கட்டுப் படுத்தி
வாழப் பழகினேன்

இப்போதெல்லாம் எத்தனை அப்பிள்கள் விழுந்தாலும்
எதையும் தின்பதில்லை
விதிகளை நீட்டி வாழ்வை சுருக்குவதுமில்லை

சிற்றின்பங்களுக்காய் சிறகுகளை வெட்டலாமா என்ன ?

வளையும் நதி கடலை அடைய
வலிக்கும் வாழ்வு வசந்தம் கௌவ
உருகும் என்னுள் உயிராய் நுழைவாய்
அக்கணம் இரவின் வீணையை இசைத்து
பகலனின் கதவை மூடி பரதம் சமைப்போம் பாதம் பிணைவோம்

வாழ்வு கணங்களை உண்டு தீர்க்கவே
கனவுகளுக்கான தல்ல

நாளைக்கும் நிலவு வரும்

த.செல்வா
1.24

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.