June 7, 2023 6:52 am

பொதுவுடைமை அறிவன் | கோ.பூமணி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

 

காற்றுக்காக காத்திருந்தோம் காரிருளில் வீற்றிருந்தோம்
ஊற்றெடுத்த வியர்வையிலே உட்கார்ந்து தானிருந்தோம்
நாற்றுவயல் நோக்கியே நடந்திடவே எண்ணியே
வீற்றிருந்தோம் வாசலில் விடியலை நோக்கியே

சேற்றுவயல் சென்றிடவே செங்கதிரோன் வரவையே
ஈற்றுநிலா மறைந்திடவே இன்பநிலா உறங்கிடவே
ஏற்றுவரும் எழிலொளியை எழில்விழியில் கண்டிடவே
ஆற்றுநீர் ஓடையில் ஆடிவரும் ஆதவனை

புதுக்கதிர் பரிதியாக்கி புதனெனும் தினத்திலே
மெதுவாக வந்திடவே மென்மையுடன் அழைத்திடுவோம்
பொதுவுடைமை அறிவனாகி பொதுவெளியில் வருகையிலே
புதுமைகள் படைத்திடும் பூந்தென்றல் காற்றினிலே

பதுமைகளின் ஓவியங்கள் பூக்கோலம் போட்டிடுதே
மதுவுண்ட வண்டாகி மாசிலா கதிர்ப்பூவில்
மெதுவாக வீற்றிடுதே மதுவுக்குள் மூழ்கிடுதே
எதுவென்று தெரியாமல் எரியாமல் வருகின்றதே

வதுவாகி வந்திருக்கும் வஞ்சிமகள் புவியன்னை
பொதுவுடமைக் கதிரவனை பொற்கரத்தால் கூப்பிடுதே
புதுவையின் பாரதியும் பைந்தமிழால் அழைத்திடவே
கதிரவன் வருகிறான் கிழக்கின் தோன்றலாகவே..

கோ.பூமணி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்