June 7, 2023 6:32 am

அனுமனுக்கு இட்ட தீ | சீனு ராமசாமி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தூதன் அனுமனுக்கு,
வாலில்
வைத்தத்
தீ
அணைந்தது,

நடுக்கடல்
எண்ணைத்
தீயும் கூட
அணைந்திருக்கிறது,

தொப்புள் கொடிதனில்
வைத்த தீ தான்
அணையாது
உயிர் அறுக்கிறது
தமிழனுக்கு,

உலகம்
அணைக்க
மறுத்த தீ
கண்கொண்டு
தணல் பார்த்தது

எத்தீயும் அணையலாம்
உளத்தின் தீ அணையுமா?

அடைக்கலம் கேட்டோர்
வயிற்றில் பற்றியத் தீ

கொந்தளிக்கும்
நினைவில்
கைவிடப்பட்ட இனத்தின் மீது
கேள்வி கேட்பாரின்றி
வைத்த
தீ

கூட்டில் வைத்தத்
தீ
தாய் மரத்தை
எரித்த
தீ

புதைந்திருக்கும்
வேர்களுக்கும்
படுகொலைப்
பிணங்களுக்கும்
உயிர் இருக்கும்,

சமுத்திர அலைகள் சூழ்ந்த நாட்டில்
எதுவும் மறக்காது
காலத்தில்..

சீனு ராமசாமி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்