Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சர்க்கரை நோயளிகள் தினமும் 4 முந்திரி பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

சர்க்கரை நோயளிகள் தினமும் 4 முந்திரி பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

2 minutes read

முந்திரி பருப்பில் விட்டமின் B,மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் கொழுப்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது.

இது இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு இதயம் தொடர்பான அனைத்து நோய்கள் வராமலும் தடுக்கிறது.

முந்திரிப் பருப்பின் நன்மைகள்
  • 12 வாரத்திற்கு நீரிழிவு நோயாளிகளுக்கு வாரத்திற்கு 30 கிராம் முந்திரி பருப்புகள் கொடுக்கப்பட்டது. 12 வாரங்கள் கழித்து அவர்களை சோதனை செய்ததில் இரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து நல்ல கொழுப்பு அதிகரித்துள்ளது கண்டறிப்பட்டுள்ளது.
  • முந்திரியில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், அவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கிறது.
  • இதில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளதால் இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • முந்திரியில் காப்பர் என்னும் தாதுப்பொருள், முடியின் கருமை நிறத்தைப் பாதுகாக்கும். ஆகவே உங்களுக்கு வெள்ளை முடி வர ஆரம்பித்தால், முந்திரியை அன்றாடம் உட்கொண்டு வாருங்கள்.
  • தினமும் முந்திரியை உட்கொண்டு வந்தால், 25% சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். மேலும் தினமும் சிறிது முந்திரியை உட்கொண்டு வந்தால் உடல் எடை குறையும்.
  • முந்திரியில் மக்னீசியம் இருப்பதால், இவை எப்படி எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறதோ, இதேப் போல் பற்களின் ஆரோக்கியத்தையும், ஈறுகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.
யாரெல்லாம் முந்திரி பருப்பை சாப்பிடக் கூடாது?
  • விளையாட்டு, நீச்சல் என்று அதிக உடல் உழைப்பு உள்ளவர்கள், இளம் பருவத்தினர் அனைவரும் முந்திரி பருப்பை தினமும் சரியான அளவில் சாப்பிட வேண்டும்.
  • ஆனால் 30 வயதைக் கடந்தவர்கள் மற்றும் வயதானவர்கள் முந்திரி பருப்பை அடிக்கடி சாப்பிடக் கூடாது.
  • குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் ஒரு நாளைக்கு 2 முந்திரிப் பருப்பைச் சாப்பிடலாம்.
  • 30 வயதுக்கு மேலானவர்கள் வாரத்திற்கு ஒருமுறை 2 – 4 என்ற அளவில் சாப்பிடலாம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More