6
உலகிலேயே ஏழ்மையான நாடுகளில் ஒன்று, ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்.
இந்த நாட்டில் பெட்ரோல் ஏற்றி வந்த ஒரு டேங்கர் லாரி வெடித்து, தீப்பிடித்து எரிந்ததில் 73 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். 110 படுகாயம் அடைந்தனர்.
மேற்கு மொசாம்பிக்கில், டேட் மாகாணத்தில் உள்ள கேபிரிட்ஜாங்கே என்ற கிராமத்தில் இந்த பரிதாப சம்பவம் நேற்று முன்தினம் நடந்துள்ளது.
டேங்கர் லாரியில் இருந்து பொதுமக்கள் பெட்ரோலை எடுத்த போது, அந்த டேங்கர் லாரி வெடித்து தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. வெடித்து சிதறியபோது, அந்த லாரியில் பெட்ரோலை விற்பனை செய்தார்களா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.
ஆனால் உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர், அந்த டேங்கர் லாரி 16–ந் தேதி மோதி விபத்துக்குள்ளாகி, 17–ந் தேதி அதில் இருந்து பெட்ரோலை பொதுமக்கள் எடுத்தபோது வெடித்து தீப்பற்றியதாக கூறி இருக்கிறார்.
சமீபத்தில் அங்குள்ள அரசு பெட்ரோல் விலையை உயர்த்தியதாகவும், அதைத் தொடர்ந்து டாலருக்கு நிகரான உள்ளூர் நாணயமான மெட்டிக்கல்லின் மதிப்பு குறைந்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.